இந்த விவரணப்படத்தில் வெளிகாட்டிய கொடுமைகளை கண்டித்து 2009 இன் முற்பகுதியில் (போர் நடந்து கொண்டிருந்த வேளை) பல தடவை புலம்பெயர் வாழ் தமிழ் மக்களாலும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களாலும் குரல் எழுப்பப்பட்டது. தமிழ் மக்கள் மீது நம்பக்கூடியவகையில் பாலியல் வன்முறை ஆட்கடத்தல் சித்திரவதை மற்றும் படுகொலைகள் தினசரி நடக்கும் போது பலமுறை பலத்த குரல் எழுப்பப்பட்டது. ஆனால் இந்த அழைப்புகள் ஒன்றும் இல்லாத சொல்லாட்சியாலும் பிரச்சாரத்தாலும் கைவிடப்பட்டது.
2009 இல் புலம்பெயர் தமிழ் மக்களால் பிரித்தானியா உட்பட பல நாடுகளின் தெருக்களில் வடகிழக்கு சிறீலங்காவில் இடம்பெறும் தமிழர் மீதான வதைகளை நிறுத்த சர்வதேச தலையீட்டைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டது ஆனால் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டது. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் எங்களின் வேண்டுகோள்களை சாந்தப்படுத்துவதற்காக பொது அறிக்கைகள் வெளியிட்டனர். இந்த குற்றங்களை விசாரிக்க வேண்டிய ஜக்கிய நாடுகள் சபை சிறீலங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் பொது இடங்களையும் வைத்தியசாலைகளையும் குறிவைத்து தாக்கும் குண்டு வீச்சில் சாகின்றனர் என்று அவர்களின் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையை நிராகரித்து விட்டது. இதிலும் �சிறீலங்காவின் கொலைகளம்” இல் காட்டியது போல் மக்கள் கொலை செய்யப்படுவதை ஜ.நா சபை செய்மதி தொழில்நுட்பம் ஊடாக கண்காணித்து கொண்டிருந்தது.
இதன் மீது நடவடிக்கை எடுக்காதது உலகத்தின் பாரிய குற்றம். ஜ.நா சபை அமெரிக்கா பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் இந்த கொடுமையை அறிந்திருந்த மட்டுமின்றி இதற்கு ஒத்துழைப்பும் கொடுத்தனர்.
ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு முக்கியமாக இறுதி மூன்று வருட போரில் பிரித்தானியா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்க்கின்றது தமிழ் மக்களுக்கு எதிராக போர் குற்ற விசாரணையில் குற்றவாளியாக நிற்பவர்களுக்கு 13.6 கோடி பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இப்போதும் பிரித்தானியா தொடர்ந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் பண உதவி அளித்து வருகின்றது. இதனால் தமிழர் மீதான அடக்குமுறை தமிழர் புனர்வாழ்வு என்ற பெயரில் நடைபெறுகின்றது. இந்த கிழமை கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரம் 500,000 பவுண்டுகள் சிறீலங்கா இராணுவத்திற்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
முள்ளிவாய்காலில் தமிழர் மீதான படுகொலை நடந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை எதுவித உத்தரவாதமோ நியாயமோ கிடைக்கவில்லை. ஜ.நா வல்லுனர்களால் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிறீலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டப்பட்ட முறையில் பாதுகாப்பு வலயம் வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளை குறி வைத்து தாக்குவதன் மூலம் தமிழ் மக்கள் மீதுதான படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றது. இந்த அறிக்கை வெளியாகி இரண்டரை மாதங்கள் ஆகியும் ஜக்கிய நாடுகள் சபையால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அறிக்கையில் போர் குற்றத்தை ஆய்வு செய்ய சர்வதேச விசாரணை வேண்டும் என அழைப்பு விடப்பட்ட போதிலும் ஜ.நா தொடர்ந்தும் அதன் வல்லுனர்களின் கருத்தை தட்டிக் கழிக்கின்றது.
இந்த படுகொலை திட்டமிட்ட முறையில் மீண்டும் மீண்டும் ஏவப்பட்ட குண்டுகளால் நிகழ்த்தப்பட்டது என யந்த அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில் ஈழத் தமிழ் மக்களால் நீண்ட நாட்களாக இது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பெருபான்மையின் ஆதரவுடன் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் படுகொலை என விவாதிக்கப்பட்டு வருகின்றது. சிறீலங்கா அரசாங்கத்தின் சர்வதேச விசாரணை மற்றும் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு ஆகியவற்றை மறுக்க சிறீலங்காவின் எதிர்கட்சிகள் முக்கிய ஊடகங்கள் மற்றும் சிங்கள பொதுமக்கள் ஆதரவு அளித்துவருகின்றனர்.
இந்த படுகொலை தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் இனப்படுகொலை என ஜக்கியராச்சிய தமிழ் இளையோர் அமைப்பு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களுடன் இணைந்து கூறுகின்றது. “சிறிலங்காவின் கொலைக்களம்” இல் காண்பித்தது போல் இன்றும் வடகிழக்கில் தமிழர் மீதான அடக்குமுறை தொடர்கின்றது. சிறீலங்காவினால் அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதி இன்னும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.
போரின் போது அரசாங்கத்தாலும் இராணுவத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களால் பாதிப்படைந்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்த்ததை இரண்டு வருடங்களிற்கு பின் சிறீலங்கா நிரூபித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை கொண்டு வருவது சர்வதேச சமூகத்தின் கையில் தங்கியுள்ளது.