விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியல் ஆகட்டும் அல்லது மேற்கத்தைய நாடு ஆனாலும் சரி விளையாட்டினை புறக்கணித்து அல்லது தடை செய்து நாடுகள் தமது எதிர்ப்பினை காட்டியும் உள்ளார்கள். இதனை நாம் கடைசியாக ரஸ்ய நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இருந்து உக்ரைன் விலத்துமளவுக்கு பாரிய அரசியல் களமாக இருந்தது. அதேபோல தான் துடுப்பாட்டத்தினை (கிரிக்கெட்) வைத்து இலங்கை தமிழர்களுக்கு மேலான இனப்படுகொலையை மறைக்க நினைக்கின்றது சிங்களமும் மேற்கு நாடுகளும்.
பல தமிழகள் துடுப்பாட்டதிற்குள் (கிரிக்கெட்) அரசியலை கொண்டு வர வேண்டாம் என்று சொல்லுகிறார்கள் ஆனால் இலங்கையோ துடுப்பாட்டத்தை ராஜாதததிரமாக பயன்படுத்துகிறது. நாட்டிற்கு நற்பெயரை எடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறார்கள். இலங்கை அணியில் இருக்கும் வீரர்கள் அரசியல்வாதி ஆகின்றார்கள், இராணுவ வீரர்கள் துடுப்பாட்ட வீரர்களாக மாறுகின்றனர். 2009 இல் எங்கள் மக்கள் அழிந்துகொண்டு இருந்தபோதும் அவர்கள் விளையாடினார்கள், இன்றுகூட மரணித்த மக்களுக்காக ஒரு மெழுகு தீரி எற்ற கூட அவர்கள் தயார் இல்லை. தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யகூடாது ஆனால் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் மற்றும் இறந்த இராணுவத்திற்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று துன்புறுத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நாம் இலங்கை அணியை புறக்கணித்து, இலங்கைக்கு எதிராக போராடியாகவேண்டும். இலங்கை அணியை புறக்கணித்து ஈழ தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்து சொலுவோம்.
இனப்படுகொலைபற்றி பறைசாற்றுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தமிழ் இளையோர் அமைப்பினரால் இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிராக போராட்டங்கள் ஒழுங்கு செய்யபபட்டு உள்ளது. அனைவரையும் அணி திரண்டு வருமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். கூடுதலான போட்டிகள் வெளிமாவட்டத்தில் இடம்பெறுவதால் மேலதிக நேர காலங்கள் எமது இணையத்தளத்தில் பதிவுசெய்யப்படும்