தமிழ் அன்னை தவப்பயனால் தமிழர் அடிமை வாழ்வுதனை ஒழிக்க வல்வெட்டித்துறையில் உதயமாகிய ஈழத்து சூரியன் தான் இன்று உலகம் போற்றும் உன்னத தலைவன். உலக மாதா பார்வதி உலகத்தந்தை வேலுப்பிள்ளை பெற்றோர் தமிழின விடியலுக்கு தத்துக் கொடுத்த தங்க மகன்; கூனிக் கிடந்த தமிழினத்தை நிமிர வைத்து, உலக நாடெங்கும் தமிழர்களுக்கு அடையாளம் தந்த அகிலம் போற்றும் வரலாற்றுத் தலைவன்.
“செய் அல்லது செத்துமடி” என்ற தாரக மந்திரத்துடன் சுதந்திர ‘ஈழம்’ ஒன்றே தமிழ் அன்னை விலங்கொடிக்கும் என்ற தாகம் சுமந்து, தாயகம், தேசியம், தன்னாட்சி மிளிர முப்படையும் உருவாக்கி ஒரு குடையில் மக்களை இணைத்து காப்பரனாய் காத்த சாணக்கியன்.
முன்தோன்றிய மூத்த மொழியும் மூத்தோர் ஆண்ட வீரத்தின் விளைநிலமும் அழியாது கொண்ட கொள்கையில் உறுதியாய் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கி சாகசம் படைத்து சர்வதேசமும் வியக்க வைத்து புறநானுற்றை விஞ்சிய நிகழ்கால ஈழத்து கரிகாலன் காலத்தில் நாமும் வாழ்வதில் பெருமையிலும் பெருமை.
26 கார்த்திகை தமிழர்களின் விடியல் சூரியன் உதித்த திருநாள் ! தமிழினம் ஒன்று கூடி விழா எடுக்கும் பெருநாள் ! அகவை 60 கானும் வீரத்தின் விளைச்சலுக்கு பல கோடி வாழ்த்துக்கள். பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லில் இன்று உலகத்தமிழர்களின் இதயத்தில் ஆட்சி செய்யும் தன்னிகரில்லா தலைவனே ! சூரியத்தேவனே ! தாயுமானவனே ! ராஜகோபுரமே ! வாழ்க இந்த பிரபஞ்சம் உள்ளவரை புலத்து இளைய சந்ததிகள் நாம் உங்கள் வழி நின்று எம் இனவிடியலுக்காய், அறவழியில் சமதர்ம நீதி கிடைக்கும் வரை இடைவிடாது தளராது போராடுவோம் எம்மினம் காக்கும் பணியில் என தங்கத் தலைவன் எங்கள் பொற்காலம் பிறந்த நாளில் உறுதி கொள்வோம்.
தமிழ் இளையோர் அமைப்பு
ஐக்கிய இராச்சியம்