பரமலிங்கம் தர்சானந் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு கல்வியையும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படும் ஒரு கும்பல் மூலம் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டு தலையில் காயங்களுடன் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தனது சக மாணவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் தடைகளைகளை மீறி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நிகழ்வுகளை நிவர்த்தி செய்ய காரணமா இருந்த காரணத்தால் அவர் பல்கலைக்கழகம் செல்லும் பொது வழியில் மறித்து மூர்க்கத்தனமா தாக்கப்பட்டார்.
பிரித்தானிய தமிழ் இளையோர் ஆகிய நாம் பிரித்தானிய ஏனைய பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்புகளுடன் இணைந்து இவ் தாக்குதலை வன்மையாக கண்டிக்குறோம். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் இளைஞர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை இலங்கை இராணுவமும் அதன் உளவுப் பிரிவும் அதனோடு இயங்கும் ஒட்டுண்ணிகளும் உடனடியாக நிறுத்த வேண்டும். இவ் மிருகத்தனமான செயல் எமக்கு மிகவும் வேதனை அளிக்குறது.
எமது மக்களின் நினைவுகளை கூட எம்மால் மீட்டிப்பார்க்க முடியவில்லை என்றால் எமது உரிமைகள் எவ்வளதுக்கு பறிக்கப்பட்டுள்ளது என்பதை வெளி உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
எமது மாணவர்களின் பாதுகாப்பை பல்கலைக்கழக சமுதாயம் உறதி செய்யவேண்டும் என இத் தருணம் நாம் கேட்டுகொள்கின்றோம்
Brunel University Tamil Society
City University Tamil Society
International Tamil Society Imperial College London
International Tamil Society St George’s, University of London
King’s College London Tamil Society
Queen Mary University of London Tamil Society
Middlesex University Tamil Society
London Metropolitan University Tamil Society
London South Bank University Tamil Society
School of Oriental and African Studies Tamil Society
Tamil Youth Organisation – UK
University College London Tamil Society
University of Hertfordshire Tamil Society
நன்றி