“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் தமிழ் மொழியின் அருமை பெருமையை எடுத்துரைத்து எம் தேசிய தலைவரின் கனவை நினைவாக்கும் வண்ணம் தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிற்பதே எங்களுடைய இந்ந கற்க கசடற என்னும் போட்டியின் நோக்கமாகும்.
கற்க கசடற என்னும் இன் நிகழ்வு வட கிழக்கு லண்டனில் நடை பெற்ற முதல் அரைச்சுற்றில் தொடங்கி, தொடர்ந்து தென் மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு ஆகிய நான்கு இடங்களிலும் அரைச்சுற்று இடம் பெற்றது.