லண்டனில் சிறிலங்கா துடுபெடுத்தாட்ட அணியைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியும் மற்றும் சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழர்கள் மீதான இன அழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டியும் 17/6/13 லண்டன் வாழ் ஈழத்தமிழர்களால் லண்டன் Oval மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையில் துடுபெடுத்தாட்ட போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மைதானத்திற்க்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.
சிறிலங்கா துடுபெடுத்தாட்ட அணியினை பார்வையிட சென்ற சிங்களவர்களால் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கவனியீர்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர் மீது காவல்துறையினரையும் தாண்டி சிங்கள காடையர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலின் போது கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்குகொண்ட சிறுமியை காலால் எட்டி உதைத்தும் சிறுவனை அடித்தும் மேலும் அங்கு நின்றவர்களை பலமாக தாக்கியும் உள்ளனர். மற்றும் சிங்கள காடையர்களால் அனாகரீகமான வார்த்தைகளால் பேசியும் சைகை மூலமாக காட்டியும் சென்றுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் சிங்களம் எவ்வாறு எமது மக்களை அடக்கி அடிமை படுத்தவும் எமது நிலங்களை பறித்தும் கலாச்சாரத்தை சீர்கெடுக்க முனையும் இப்பொழுதில் தமிழர்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகளிலும் தனது இனவெறியை காட்டி எகத்தாளம் இடுகிறது.
இவ்வேளையில் தமிழ் இளையோர் அமைப்பு சிங்கள காடையர்களின் இனவெறியை வன்மையாக கண்டிக்கும் நேரத்தில் லண்டன் காவல்துறையினரிடம் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டியும் கேட்டுக்கொள்கின்றது. சிறிலங்காவை கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் அதிகமான மக்களை பங்குகொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கியராச்சியம்