இலங்கை அரசாங்கம் எமது மாவீரர்களின் கல்லறைகளை சிதைக்கலாம், அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கலாம் ஆனால் அவர்களின் ஆத்மாவில் இருந்து எழும்பிய அந்த விடுதலை வெறி ஒவ்வொரு தமிழனின் ரத்தத்தில் உறைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த எத்தனையாயிரம் படையினர் வந்தாலும் முடியாது. இலங்கை அரசாங்கத்தின் பிரச்சார போரை நாம் முறியடித்து அனைத்து தமிழ் மக்களும் தேசிய நினைவெழுச்சி நாளில் கலந்துகொண்டு எங்களின் ஒற்றுமையை நிலைநாட்டி காட்டவேண்டும்.
தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கு அமைய
“மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது”
எமது மாவீர செல்வங்களை கார்த்திகை 27 நினைவு கொள்வதோடு மட்டும் நின்று விடாமல் உயிர்விடும் வேளையில் கூட மாவீரர்களின் வாயினில் உதிர்ந்த சொல் தமிழீழம், அந்த வீரவேங்கைகளின் கனவை நிறைவாக்க இறுதி வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.