இன்று எங்கள் “தமிழ் இளையோர் அமைப்பு” இற்கு வயது பதினைந்து
பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பின் பிரித்தானியா கிளைக்கு இன்று வயது பதினைந்து.
தாயகத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவுவதற்காக முதன் முதலாக ஒன்று சேர்ந்தார்கள் எம் இளையோர்கள்.
பின்பு “இளந்தளிர்” ஆக துளிர் விட்டு பிரித்தானியா வாழ் இளையோர்களின் பல்கலைத் திறனை வெளி உலகிற்கு பறைசாற்றினார்கள்.
தங்கள் குறிக்கோளை அடைவதற்கு வழிவகுக்கும் விதமாக பகுதி பகுதியாக பிரித்து வடமேற்கு பிரதேசத்தில் “ இளங்காற்று” ஆக வீசி அந்த பகுதியில் வாழும் இளையோர்களின் திறமைகளை மெருகேற்றினார்கள்.
தென்கிழக்கு பிரதேசத்தில் “இளங்குருதி” ஆக தமிழ் சிறார்களிடம் அடங்கியிருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தார்கள்.
வடகிழக்கு பிரதேசத்தில் “ஈழக்கதிர்கள்” ஆக ஒளி வீசி மலரப் போகும் ஈழத்தின் இளைய சந்ததியினருக்கு தமிழீழம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் “வர்ணங்கள்” ஆக பல வண்ண மயமாக பல்லின மக்களின் நிகழ்வுகளை நடாத்தி எல்லா இனத்தினருக்கும் அதன் ஒரு கலை அவர்களிற்கு ஒரு அடையாளம் இருப்பதை உணர்த்தினார்கள்.
பிரித்தானியா வாழ் இளையோருக்கும் மட்டும் அல்லாமல் தாயகத்தில் வாழும் இளையோருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்தனர். சிறீலங்கா அரச படையினரால் அவர்கள் படும் துன்பம் கண்டு, அவர்கள் படும் வேதனையை மேற்கு உலகிற்கு தெரிவிக்கும் விதமாக “Boycott Sri Lanka Cricket”, “Anti-presidential” மற்றும் SL Independence Day போன்ற ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு எமது தாயகம் அடித்து நொருக்கப்பட்ட போதும் வீழவில்லை எமது தமிழ் இளையோர் அமைப்பு. வீறு கொண்டு எழுந்தனர் எமது இளையோர். மீண்டும் “இளந்தளிர்” ஆக துளிர் விட்டனர். “கற்க கசறட” என பிரித்தானியா வாழ் சிறார்களின் தமிழ்த் திறனை வளர்க்கும் விதமாக போட்டி நிகழ்ச்சிகளை வருடாந்தம் நடாத்தி வெற்றி நடை போடுகின்றார்கள்.
இத்துடன் நின்றுவிடாமல் இன்னும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து அதிலும் வெற்றி காணவேண்டும். தமிழ் இளையோர் அமைப்பின் வளர்ச்சிக்காக பாடு படும் பிரித்தானியா வாழ் இளையோருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த சந்ததியினரும் உங்களை பின்பற்றி உங்கள் பணி தொடர வழி அமைத்து கொடுங்கள். அதுவரை உங்கள் பணி தொடரட்டும். மலரும் தமிழீழத்தில் நாம் தமிழ் என மிளிர்வோம்
On 22nd November 2004, TYO UK was established by a group of passionate and dedicated Tamil youth in order to unite and help serve the community whilst promoting and understanding the unique language, history, culture and identity.
TYO UK provides a platform for like minded youth to enhance their knowledge on the national liberation struggle of Tamileelam and educate the generations to come of the integrity of the Tamil nation.
Today we reaffirm our commitment to follow the path of our Thalaivar and our Maaveerar and to continue the fight for justice until our aspirations of a free Tamileelam are achieved.